நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசு மற்றும் பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986 கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2013 கீழ் உரிய அறிவிப்புகள் இல்லாத பொட்டல பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக ரூபாய் 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் சட்ட ரீதி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.