Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு ரயில் நிலையத்தில்…. “பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை”….!!!!!

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றார்கள்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. தொலைதூர பயணத்திற்கு பயணிகள் அதிக அளவில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனிடையே எளிதில் தீபற்ற கூடிய பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் பொதுமக்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிக ரீதியாக ரயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றார்களா என போலீசார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதன் காரணமாக ஈரோடு ரயில் நிலையத்தில் நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது அங்கு வரும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். பட்டாசு வெடிப் பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா என தீவிரமாக சோதனை செய்து வருகின்றார்கள். பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார்கள்.

Categories

Tech |