மத்திய அரசு மகளிர் சக்தி விருதிற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
தகுதி வாய்ந்த தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கான இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பத்திற்கான இறுதி நாள் அக்டோபர் 20 அன்று முடிந்துவிட்டது. தற்போது பெறப்பட்டிருக்கும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுடெல்லியில் குடியரசு தலைவரால் தேசிய விருது வழங்கப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.