சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார் அஞ்சலி.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது.
இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி உடன் இணைந்து ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அஞ்சலி கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியிருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/Cj8GO3ipdaS/?utm_source=ig_embed&ig_rid=6099cb4f-11c0-4346-a226-bd4fc1105421