Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமா இப்ப நிறையவே மாறி இருக்கிறது”…. நடிகை லைலா ஓபன் டாக்….!!!!!

சினிமா மாறிவிட்டதாக லைலா கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” படத்தில் லைலா நடித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதுக்குறித்து லைலா கூறியதாவது, 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்து அதற்கான நல்ல கதைக்கு காத்திருந்தபோதுதான் மித்ரன் வந்தார். அவர் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும் சூர்யாவுடன் நடித்து பாப்புலர் ஆனேன். இப்போது அவர் தம்பி மூலம் ரீ-என்ட்ரிகொடுக்கின்றேன் என்பது சந்தோஷமாக உள்ளது. இப்போது சினிமா நிறைய மாறி உள்ளது. மரத்தைச் சுற்றி டூயட் பாடுகிற ஹீரோ ஹீரோயின்கள் இல்லை. கதைக்குள் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா கேரக்டர்களும் முக்கியத்துவமாக உள்ளது. நல்ல சினிமாக்களை வித்தியாசமான சினிமாக்களை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதை படைப்பாளிகள் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் லைலா.

Categories

Tech |