Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO : தப்பா தட்டி கேக்குறது தானே நம்ம வேலை.. அதுக்குத்தான் நாம இருக்கிறோம்… கேட்டுருவோமா…!!!!!

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் மிரட்டலாக பேசி உள்ளார்.

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதற்குள்ளேயே தற்போது சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் அசல் கோலார் தனலட்சுமியிடம் சண்டை போட, மற்ற பெண் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் கடுப்பாக்கியது.

அசல் கோலார் செய்யும் காரியங்களை பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இதுபோல பல சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் கமல் பங்கேற்கும் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் கமல் தப்பு பண்றவங்களுக்கு தான் செய்யறது தப்புன்னு தெரியாமலே போகிறது. எப்போ தெரியுமா..? நீ செய்யுறது தப்புன்னு சொல்றதுக்கு ஆளே இல்லாம போகும்போது தான். தப்பே தட்டி கேட்கிறதுதானே நம்ம வேலை, அதற்கு தானே இருக்கிறோம்.. கேட்டுருவோமா என மிரட்டலாக கூறியிருக்கின்றார். இதை பார்த்த பார்வையாளர்கள் அப்போ இன்னைக்கு சம்பவம் இருக்கா என கேட்டுள்ளார்கள். சிலரோ நீங்கள் கேட்பதுதான் எங்களுக்கு தெரியுமே. தப்பு செய்பவர்களை விட்டுட்டு மற்றவர்களை வறுத்தெடுப்பீர்கள் என அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |