Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்… “அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுமா…?” எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. நெல்லையில் உள்ள காவல் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளில் வாரத்தில் 5 முதல் 10 வழக்குகள் வரை பேருந்து பயணத்தின் போது நடந்த குற்ற சம்பவங்களாகவே இருக்கின்றது. இதனை தடுப்பதற்காக அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.

Categories

Tech |