Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்… “மகளை அழைத்து செல்ல வந்த ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்த போது நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரங்கப்பிள்ளை தெருவை சேர்ந்த நடராஜன் என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். இவரின் மனைவி ராதா. இவர் நத்தநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர்களின் மூத்த மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல்லில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக மகளை அழைத்துச் செல்ல காரில் நாமக்கலுக்கு அவரின் மனைவி ராதா இளைய மகள் பிருந்தா மற்றும் உறவினர் சஞ்சய் உள்ளிட்டோருடன் சென்றுள்ளார்கள்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் கார் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே சென்ற போது முதலைப்பட்டி இருக்கும் மேம்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நாய் மீது கார் மோதி விபத்து குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ராதா உயிரிழந்தார். ஆசிரியர் நடராஜன், இளைய மகள் பிருந்தா, உறவினர் சஞ்சய் உள்ளிட்டோர் லேசான காயம் அடைந்தார்கள். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாவின் உடலை கை பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |