கும்பகோணத்தில் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கும்பகோணத்திற்கு வந்தார்கள். இதனால் கும்பகோணம் நகர் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் சூழ்ந்தது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தார்கள்.
மேலும் தீபாவளி விற்பனைக்காக பீஹார், உத்தர பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறு தொழில் செய்யும் ஜவுளி வியாபாரிகள் தங்களின் பொருட்களை அந்தந்த மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து கடை வீதியில் உள்ள தெருக்களில் விற்பனை செய்தார்கள். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் எங்களின் பொருட்களை தமிழக மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றார்கள். தமிழ்நாட்டில் எங்களது பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின்றது. தற்போது தஞ்சை மாவட்ட கலாச்சாரத்திற்கு ஏற்றபடி ஆடைகள் விற்பனைக்கு கொண்டு வந்து இருப்பதால் ஆடைகளை வாங்குவதில் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.