Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில்…. “மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி”…!!!!!

தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதியார் வித்தியாலயம் பள்ளியில் தீபாவளி பண்டிகையொட்டி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சகி மைய நிர்வாகி செலின் சார்ஜ் தலைமை தாங்கினார்.

பின் மாணவிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பெண் கல்வியில் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பது பற்றியும் பெண்களுக்கு பிரச்சனை என்றால் 181 எண்ணை அழைக்கலாம் எனவும் மாணவிகளிடம் உரையாற்றினார். இதை அடுத்து அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இனிப்புகளை முதுகலை ஆசிரியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Categories

Tech |