Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மொபைட் மீது மோதிய கார்”…. 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு….!!!!!

மொபட் மீது கார் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் கோவில்பாளையம் புதூரை சேர்ந்த சின்னராமசாமி மற்றும் மனோகரன் என்பவர்கள் தாராபுரம் திருப்பூர் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது அங்கிருக்கும் தனியார் கல்லூரி அருகே வந்ததும் சாலையை கடக்க முயன்றார்கள்.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |