Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் நினைவு திட்டம்”…. சத்தமே இல்லாமல் உதவிய நடிகர்கள்… பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி….!!!!

புனித் ராஜ்குமார் நினைவு திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் உதவி இருப்பதாக பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 46 வயதே ஆன நிலையில் திடீரென மரணம் ஏற்பட்டதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் நினைவு பெற்ற நிலையில் அவரின் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிவித்தார்.

இது மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் கர்நாடகாவில் 31 மாவட்டங்களுக்கும் இலவச ஆம்புலன்ஸ் வழங்க முடிவு செய்தார். இது குறித்து கேள்விப்பட்ட நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்கள். இருவரின் உதவி குறித்து பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கின்றார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, அன்புள்ள சூர்யா மற்றும் சிரஞ்சீவி அண்ணா அப்பு எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்திற்காக ஆம்புலன்ஸ் வழங்கி எங்கள் கனவை நினைவாக்கி இருக்கின்றீர்கள் உங்களுக்கு நன்றி என குறிப்பிட்டார்.

Categories

Tech |