காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.
ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப் கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் மொத்த உலக வசூல் 180 கோடியை கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் கூறியுள்ளது. இந்தியாவில் 165 கோடியும் வெளிநாடுகளில் 15 கோடியும் வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் தாராளமாக இத்திரைப்படம் தியேட்டரில் ஓடும் எனக் கூறுகின்றார்கள். அதற்குள் 200 கோடி வசூலை கடந்து விடும் என கன்னட திரையுலகத்தினர் கூறி வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.