இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடினார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த ஜூன் 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் குறித்த பேச்சு தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர் ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். யாகவராயினும் நாகாக்க திரைப்படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போது நிக்கிக்கும் ஆதிக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் திருமணமானது மே 18ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த வில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படுத்தினார்கள். இவர்களது திருமணம் 2020-ஆம் வருடம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் ரன்பீர் மற்றும் அலியா பட் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.