காதல் கிசுகிசு பரவி வந்த நிலையில் நடிகை இம்மானு வேல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .
தமிழ் சினிமா உலகில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல். இவர் இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவருக்கு தற்போது 26 வயதாகின்றது. இந்த நிலையில் இவரும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் காதலிப்பதாக தெலுங்கு சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகின்றது.
மேலும் இருவரும் ஒரே வீட்டில் வாழ்வதாகவும் பேசப்பட்டது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவருமே பதில் சொல்லாமல் இருப்பதால் காதலிப்பது உறுதி என பேசப்பட்டது. இந்த நிலையில் இதற்கு அனு இம்மானுவேல் பதில் அளிக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, நான் யாரையும் காதலிக்கவில்லை. சேர்ந்து வாழவும் இல்லை. எனக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.