Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஜப்பானிலும் சாதனை படைக்கும் RRR”…. பாராட்டும் ஜப்பான் ரசிகாஸ்….!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியாகி முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

“ஆர் ஆர் ஆர்”  திரைப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்தது. சென்ற வருடமே வெளியாக இருந்த இத்திரைப்படமானது கொரோனா காரணத்தில் வெளியாக இருந்தநிலையில், சென்ற மார்ச் 25 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மூன்று நாட்களில் மூன்று கோடியை தாண்டி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. ஜப்பான் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் பாராட்டி இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |