Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மதவெறுப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும்”…. முஸ்லிம் லீக் தலைவர் பேட்டி…!!!!

மதவெறுப்பு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, உலக நாடுகளில் ராணுவத்திற்காக அதிக செலவும் செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது நாடாக திகழ்கின்றது. ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பிடம் பிடித்திருக்கின்றது.

மதவெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசு மற்றும் பிரதமரின் கடமையாகும். மதவெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருபவர்கள் உச்ச நீதிமன்றம் கண்டித்து இருக்கின்றது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் நலனுக்காகவும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் என பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

Categories

Tech |