சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் மிஷ்கின் நடிக்கின்றார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கின்றாராம். இவர்களின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் படமாக்கப்படும் என சொல்லப்படுகின்றது.