Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கம்”…. அமைச்சர் திறந்து வைப்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியை 1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள் அறை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க உதவி ஆட்சியர் கௌரவக்குமார், அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். பின் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று நவீன அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைத்தார்.

பின் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 131 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக கூறினார். மேலும் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Categories

Tech |