தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (28ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது.
இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கம்ப்யூட்டர் பயிற்சி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் இருப்பவர்கள் தங்களின் பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கூறப்பட்டிருக்கின்றது.