Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அமராவதிஅணையில் பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி”…. சுற்றுலா பயணிகள் கோரிக்கை….!!!!!

அமராவதி அணையில் பாதுகாப்பற்ற படகு சவாரி நடப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டிருக்கின்றது. அணைக்கு முன்பாக பூங்கா, ராக் கார்டன் அமைந்திருக்கின்றது. இயற்கை எழில் நிறைந்த இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு படகு சவாரி மீண்டும் ஆரம்பமானது.

இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்கள். இதில் பத்து நிமிடத்திற்கு ஒரு நபருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் அணையில் இரண்டு படகுகள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர் காக்கும் கவசம் வழங்கவில்லை.

இதனால் அவர்கள் ஆபத்தான முறையில் சவாரி மேற்கொண்டார்கள். படகு இயக்குபவர்களின் அலட்சியத்தால் படகு சவாரி மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகின்றது. ஆகையால் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |