Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்கி 3 பேர் பலி…. “இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு”….!!!!!

விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது எந்திரமயமாக்கப்பட்டு மனிதர்களை பயன்படுத்துவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டிருக்கின்றது. இச்சம்பவத்தில் பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கும் தலா 21 லட்சம் வழங்கப்படும் எனவும் அதில் ஓட்டல் நிர்வாகம் தலா 15 லட்சமும் தமிழக அரசு தலா 6 லட்சமும் வழங்கும்.

இதை தவிர இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் கருணை தொகையும் வீட்டுமனை பட்டா குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இந்த ஓட்டலின் உரிமையாளரை அடுத்த 72 மணி நேரத்திற்குள் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |