ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை மர்ம நபர் இழுத்ததால் ரயில் நடுவழியில் நின்றது.
நேற்று முன்தினம் காலை 5.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலில் பயணம் செய்த ஒருவர் பெட்டியின் அபாய சங்கிலியை இழுத்ததார்.
இதனால் ரயில் பாலத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. இதனால் தகவல் அறிந்து அங்கு சென்று அபாய சங்கிலி பிடித்து இழுத்த பெட்டியில் ஏறி பணிகளிடம் விசாரணை செய்ததில் சங்கிலியை இழுத்தவர் யார் என தெரியவில்லை. இதன்பின் லாக் சரி செய்யப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக ரயில் பாம்பனில் இருந்து மதுரை நோக்கி சென்றது.