17 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் மம்மூட்டி கைகோர்த்துள்ளார்.
மலையாளத்தில் உச்ச நடிகராக வலம் வரும் மம்மூட்டி நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான ராஜமாணிக்கம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இத்திரைப்படத்தை அன்வர் ரஷீத் இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் அன்வர் ரஷீத் மம்மூட்டியை வைத்து இயக்க உள்ளார். ராஜமாணிக்கம் திரைப்படம் 17 வருடங்களுக்கு முன்பே 23 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் மம்மூட்டிக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகாது என்ற பிம்பத்தை இந்த படம் உடைத்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.