லவ் டுடே திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படகுழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.