சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதல் நடைபெற்றதா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி அருகே ஏற்காடு செல்லும் ரோட்டில் பெண்கள் கிளை சிறைச்சாலை இருக்கின்றது. இங்கே 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறைச்சாலையில் பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்ற நிலையில் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக உதவிப் பெண் வார்டன் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்ததாக சொல்லப்படுகின்றது.
அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன் தாமதம் பற்றி பாரா புத்தகத்தில் எழுதி இருக்கின்றார். ஆனால் தாமதமாக வந்த உதவிவார்டன் அந்த பக்கத்தை கிழித்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனிடையே புகாருக்கு ஆளான உதவி வார்டன் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே சிறையில் பணியாற்றும் இரண்டு வார்டன்கள் லெஸ்பியன் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்டதாக செய்தி பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிறைக்குள் வார்டன்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டார்களா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுகுறித்து சிறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது, லெஸ்பியன் விவகாரத்தில் பெண் வார்டன்கள் மோதியதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இது போன்ற சம்பவம் சிறைக்குள் நடக்கவில்லை. இருப்பினும் இது குறித்து விசாரணை செய்து வருவதாக கூறினார்.