தூத்துக்குடி இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தரையர் காலனி கடற்பகுதியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் என்பவர் சுற்றித்திரிந்ததால் சென்ற வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிக்க முயன்றதும் தெரிந்தது.
இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள். அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் அவர் சிறையில் இருக்கின்றார். சென்ற மூன்றாம் தேதி போலீசார் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்தார்கள்.
ஆனால் ஜோனதன் தோர்ன் ஆங்கிலத்தில் குற்ற பத்திரிக்கையின் நகலை கேட்டதால் சென்ற 11-ஆம் தேதி ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இதுவரை 35 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களிடம் விசாரணை நேற்று ஆரம்பமானது. நேற்று விசாரணை நடைபெற்று வந்ததை தொடர்ந்து விசாரணை வருகின்ற 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.