வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
ரசிகர்கள் அனைவரும் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்று திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் விஜய் ஸ்டைலிஷான லுக்கில் மாஸாக இருக்கின்றார். இதனிடையே வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான மகரிஷி திரைப்படத்தில் மகேஷ் பாபு அணிந்திருக்கும் உடை மற்றும் காட்சிகள் வாரிசு திரைப்படத்தை போலவே இருப்பதால் இரண்டு திரைப்படத்தையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றார்கள் நெட்டிசன்ஸ்.
#Maharshi ரீமேக் ஆஹ் 🙄#Varisu pic.twitter.com/z6QxBf69Hw
— Jagadish (@scbjagadish) October 26, 2022