Categories
சினிமா தமிழ் சினிமா

“த்ரிஷாவா இல்ல நயன்தாராவா…?” அஜித்துக்கு யாரு ஜோடி…???

ஏ.கே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார்கள். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தையடுத்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படபிடிப்பானது இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவர் பத்து கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது நயன்தாரா அல்லது திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

Categories

Tech |