காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் கேரளாவில் இருக்கும் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்திலிருந்து திருடப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.
ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப் கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இத்திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது. இந்தப் படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது இந்து அமைப்பினர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் கேரளாவில் இருக்கும் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்திலிருந்து திருடப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுப்போம் என இசைக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது.