கும்முடிபூண்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தபால் தெருவை சேர்ந்த சந்தியா என்பவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். இவர் சென்ற 25ஆம் தேதி கும்முடிபூண்டி சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கின்றார்.
அப்போது எதிர்பாராவிதமாக அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சந்தியா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.