Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி”….விபரீத முடிவால் திருவள்ளூரில் சோகம்…..!!!!!

கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ். ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் கடம்பத்தூரில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு, தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் சுரேஷின் பெற்றோருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தார்கள். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |