மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மதினா பள்ளி மலட்டாறு மேம்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோவில் அருகே சென்ற மூன்று நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்து இருக்கின்றார். அவரை மீட்குமாறு தாசில்தார் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதை அடுத்து அதிகாரிகள் இளம் பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் தான் ஒரு எம்பிபிஎஸ் மாணவி எனவும் தன்னுடைய பெயர் ரோசி எனவும் சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறினார்.
பின் சிறிது நேரத்திலேயே தனது பெயர் சின்னு எனவும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் மாற்றி மாற்றி கூறினார். இதனால் வருவாய் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை 12.30 மணி அளவில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.