காந்தாரா திரைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.
ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப் கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இத்திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே தனது இணையதள பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, உங்களுக்கு என்ன தெரிந்ததோ அதை எழுதுங்கள். உங்களுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் கதைகளை உங்கள் இதயத்தில் இருந்து சொல்லுங்கள்.
கடைசி 20 நிமிடம், இந்த படம் என்னை சிலிர்க்க வைத்தது. மேலும் நான் திக் பிரம்மை பிடித்தவனாக ஆகிவிட்டேன். கோலா, பூதங்கள், தெய்வங்கள் என எனது சிறு வயது நினைவுகளுக்கே நான் சென்று விட்டேன். அவற்றை ஒரு திரைப்படமாக மிகவும் மரியாதையாகவும் அழகாகவும் காட்டி இருக்கின்றீர்கள். உங்களிடம் அதிக சக்தி உள்ளது. தொடர்ந்து மேலே சொல்லுங்கள் எனக் கூறியிருக்கின்றார்.