Categories
உலக செய்திகள்

“கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறன் கொண்ட தடுப்பூசி!”…. வெளியான தகவல்…!!

மாடர்னா தடுப்பூசி, கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மக்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் இரண்டாம் தவணை ஐந்து மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாடர்னா தடுப்பூசி, 87% கொரோனா தொற்றை தடுக்கும் செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தை எதிர்த்து 95% பாதுகாப்பு அளிப்பதாகவும், உயிரிழப்பை 98% தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 3,52,878 நபர்களுடன், தடுப்பூசி செலுத்தாத, அதே எண்ணிக்கையுடைய மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Categories

Tech |