டெல்லி தப்லிகி ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என மத்திய பிரதேசத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள், அமைப்புடன் தொடர்புடைய 10 இந்தியர்கள் மற்றும் போபாலில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த 13 பேர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மீது ஐபிசி 188, 269, 270 உள்ளட்ட பிரிவுகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 13, மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இந்த நிகச்சியும் ஒரு காரணமாக தான் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டவர் சிலர் சுற்றுலா விசாவை பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு பல இடங்களில் பரவியுள்ளது. இதையடுத்து, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மௌவுளான ஆசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் தங்கியிருந்த தப்லிகி ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.