ரஷ்ய நாட்டில் ஒரு மாதத்தில் சுமார் 87 ஆயிரம் நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம் 2-ஆம் இடத்திற்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
இதில் ரஷ்ய நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிக மக்கள் கொரோனா பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர். ஒரு மாதத்தில் சுமார் 87 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதன்மூலம் உலக நாடுகளிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு முன்பு இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த பிரேசில் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.