Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைப்பதற்கு நிதி உதவி”…. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வுதவிகளை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு, சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

மேலும் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். கட்டிடத்தின் வயதை பொறுத்து நிதி உதவி வழங்கப்படுகின்றது. நிதி உதவி பெறும் தேவாலயம் வெளிநாட்டில் இருந்து எந்த நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் [email protected] என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் உரிய படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் தகவலுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |