Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்தில் துர்நாற்றம்”… கண்டுகொள்ளாத கண்டக்டர்…. சிரமத்திற்குள்ளான பயணிகள்….!!!!!

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது.

இதில் ஆத்திரம் அடைந்த பயணிகள் நாங்கள் கட்டணம் செலுத்தி தான் பயணம் செய்கின்றோம். பேருந்தை சுத்தம் செய்ய வேண்டாமா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இருப்பினும் நடத்துனர் அதை கண்டு கொள்ளாமல் இருந்தார். வேறு வழி இல்லாமல் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் பயணிகள் மூக்கில் துணிகளை கட்டியவாறு சிரமத்துடன் பயணம் செய்தார்கள். பின் ஒரு வழியாக பேருந்து கோத்தகிரி சென்றடைந்தது. மேலும் பயணிகள், அரசு பேருந்துகளை ஓரளவுக்காவது சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |