Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வீடு தேடி கல்வித் திட்டம்”…. ஓராண்டு நிறைவு… “போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்”….!!!!

வீடு தேடி கல்வி திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குன்னூர் தன்னார்வலர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அட்டடியில் இருக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையத்தில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார்.

அப்போது பெயர், ஊர் குறித்து கேட்டார். இதன் பின்னர் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கி ஒரு வருடமாகி இருப்பதால் எவ்வாறு இருக்கின்றது? நீங்கள் எத்தனை குழந்தைகளுக்கு பாடம் கற்று தருகின்றீர்கள்? ஏதாவது முன்னேற்றம் இருக்கின்றதா என கேட்டார். அப்போது தன்னார்வலர் பதில் கூறியதாவது, 19 குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதாகவும் சென்ற வருடத்தை விட இந்த வருடம் பரவாயில்லை எனவும் குழந்தைகள் ஆர்வத்துடன் வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார். இதை அடுத்து அவருக்கு முதல்வர் வாழ்த்து கூறினார்.

Categories

Tech |