படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் அண்மையில் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி இத்திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.