ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் ரஜினியின் அடுத்த இரண்டு திரைப்படங்களை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரு திரைப்படத்திற்கான பூஜை வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.