Categories
சினிமா தமிழ் சினிமா

“பல விருதுகளை பெற்றுத் தந்த இயக்குனர்”…. பிரபல நடிகர் கார் பரிசளிப்பு….!!!!

பல விருதுகளை பெற்றுத்தந்த இயக்குனருக்கு நடிகர் உன்னி முகுந்தன் கார் பரிசளித்துள்ளார்.

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கில் பாகமதி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தற்போது சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்து தயாரித்த மேமப்படியான் திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இவருக்கு நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் ஓரளவுக்கு அவருக்கு லாபத்தை கொடுத்தது.

மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை இத்திரைப்படம் பெற்றது. இத்திரைப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து சரியாக இரண்டு வருடம் முடிந்த நிலையில் ஞாபகார்த்தமாக இயக்குனர் பெற்று கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு நடிகர் உன்னி முகுந்தன் விலை உயர்ந்த காரை பரிசாக அளித்திருக்கின்றார். இதோடு அவர் இது ஒரு பரிசு அல்ல.. தகுதி வாய்ந்த உங்களுக்கு வரவேண்டிய ஒன்றுதான் என கூறியிருக்கின்றார்.

Categories

Tech |