Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“காலங்களில் அவள் வசந்தம்”… படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம் இதோ…‌!!!!

காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார்.

ஆனால் அந்த காதல் ஒரு கட்டத்தில் பிரிவில் முடிகின்றது. அதன் பின் நம்ம ஹீரோ அப்பாவின் நெருங்கிய நண்பர் மகள் அஞ்சலி நாயர் தனது குடும்பத்தோடு நம்ம ஹீரோ வீட்டிற்கு வராங்க. நம்ம ஹீரோவை பார்த்ததும் அஞ்சலி காதலில் விழுகின்றார். பின் அவரே நேரடியாக கவுசிக்கிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கின்றார்.

பின் இருவரின் திருமணமும் நடக்கின்றது. ஒரு கட்டத்தில் கவுசிக்கின் பழைய வாழ்க்கை அஞ்சலிக்கு தெரியவர ஹீரோவை பிரிய நினைக்கின்றார். இறுதியில் நம்ம ஹீரோவின் வாழ்க்கை என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதி கதையாகும். இத்திரைப்படத்தில் கௌஷிக் அறிமுக நடிகர் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

பெண்களைச் சுற்றித் திரியும் ஒரு வாலிபர் என்னென்ன செய்வாரோ அதனை ரசனையுடன் செய்து இருக்கின்றார் ஹீரோயின் அஞ்சலி நாயர். தனக்கான வேடத்தை சிறப்பாக செய்திருக்கின்றார். இரண்டாவது ஹீரோயின் ஹிரோஷினி சில காட்சிகளில் வந்தாலும் உண்மையான காதல் என்ன என்பதை தன் நடிப்பால் அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அறிமுக இயக்குனர் ராகவ் முர்தத் படக்குழுவினரை திறம்பட வேலை வாங்கி இருக்கின்றார். கேண்டில் லைட் டின்னர், கிரீட்டிங் கார்டு என 90’s 2k கிட்ஸ் களின் காதலை கண்முன் எடுத்து இருக்கின்றார். இந்த காலத்து காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஹரி எஸ் ஆர் இசையில் பாடல்கள் சுமாராகவே இருக்கின்றது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கின்றது. மொத்தத்தில் காலங்களில் அவள் வசந்தம் ஓர் ஓவியம்.

Categories

Tech |