ஆசிர்வாதபுரம் பள்ளிக்கு புகையிலை பொருட்கள் இல்லாத பகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பேய்குளம் அடுத்த ஆசீர்வாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு புகையிலை இல்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார், சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சான்றிதழை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள். இதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என பதாகைகள் வைக்கப்பட்டது.