தூத்துக்குடியில் நாளை மதுபான கடைகள் செயல்படாது என ஆட்சியர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாளை அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
நாளை மதுபான விற்பனை நடைபெற கூடாது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானத்தை கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றார்.