விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் தொடங்கி வைக்க மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலசாமி, உடற்கல்வி ஆசிரியர் வையணன், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள்.