ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி.
கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.
ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப் கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது. அண்மையில் இத்திரைப்படத்தை பாராட்டி ரஜினி ட்விட் செய்திருந்தார்.
ನೀವು ಒಂದ್ ಸಲ ಹೊಗಳಿದ್ರೆ.. ನೂರು ಸಲ ಹೊಗಳ್ದ೦ಗೆ ನಮಗೆ.❤️ಧನ್ಯವಾದಗಳು @rajinikanth sir ನಮ್ಮ ಕಾಂತಾರ ಚಿತ್ರ ನೋಡಿ ನೀವು ಮೆಚ್ಚಿದ್ದಕ್ಕೆ ನಾವು ಸದಾ ಆಭಾರಿ🙏🏼 #Kantara @VKiragandur @hombalefilms @gowda_sapthami @Karthik1423 pic.twitter.com/MNPSDR5jx8
— Rishab Shetty (@shetty_rishab) October 28, 2022
இந்த நிலையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ரஜினியை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுகுறித்து ரிஷப் ஷெட்டி ட்விட்டரில் கூறியுள்ளதாவது, ஒருமுறை உங்களை புகழ்ந்தால் 100 முறை உங்களை புகழ்வோம், நன்றி ரஜினி சார். எங்களுடைய காந்தாரப் படத்தை பாராட்டியதற்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம் என கூறி உள்ளார்.