நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றுக் கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங் பேசி உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் அவருக்கு முன்னால் ஒரு மைக் இருக்கின்றது. அதில் சமந்தா தனது முகத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கைகளில் இதய சிம்பிலை அடையாளப்படுத்தி இருக்கின்றார். மேலும் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங்கை பேசியிருக்கின்றார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அதை நிவாரணம் அடைந்த பிறகு இதை பகிரலாம் என எதிர்பார்த்தால் நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நாள் எடுத்துக் கொள்கின்றது. நான் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன். நான் விரைவில் பூரான குணம் அடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தது. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் என்னால் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கின்றது. நான் தற்போது குணமடையும் நாளை நெருங்கி விட்டதாக எண்ணுகிறேன். நான் உங்களை நேசிக்கின்றேன். இதுவும் கடந்து போகும் என கூறி இருக்கின்றார்.
https://www.instagram.com/samantharuthprabhuoffl/?utm_source=ig_embed&ig_rid=92449907-fbf2-441f-a9ae-ee3fa95f09c1