தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாலே ஏற்படுகின்றது. இந்த நிலையில் தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. மேலும் விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இதனால் பல இடங்களில் புதிய சாலை ஓரத்தில் விற்பனையாளர்கள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஹெல்மெட் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. அண்மையில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்து சிக்கி ஹெல்மெட் உடைந்து தலை நசங்கி உயிரை இழந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் ஐ.எஸ்.ஐ ஹெல்மெட்டுகளை வாங்குவதை பாதுகாப்பு என எண்ணுகின்றார்கள்.
ஆனால் சில விற்பனையாளர்கள் போலியான ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் ஹெல்மெட்டுகளை விற்பனை செய்கின்றார்கள் என பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இதனால் தரமற்ற ஹெல்மெட் விற்பனைகளை தடுக்க அதிகாரிகள் அவைகள் விற்பனை செய்யப்படும் சாலையோர கடைகள் மட்டுமல்லாமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகளையும் ஆய்வு செய்து தரமானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.